இலங்கை ஊடக ஊழியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பினால் (FMETU) எதிர்வரும் 2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு வருடங்களுக்கான செயற்றிட்டத்தை திட்டமிட முழு நாள் செயலமர்வவொன்றை அண்மையில் நடத்தியிருந்தது.

இந்த நிகழ்ச்சியானது சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு, (IFJ-UTU) இனது 2023 ஆம் ஆண்டின் தொடர்ச்சியான முன்முயற்சியாகும். நாடளாவிய ரீதியில் ஊடகவியலாளர்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த முக்கியமான முயற்சியில் ஸ் ரீலங்கா ரெயின்போ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியமை மகிழ்ச்சியளிக்கிறது. பயிற்சியாளர்களான திலீப சமரசிங்க மற்றும் மஹீஷ்கா பெனாண்டோ ஆகியோரால் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் FMETU செயற்குழுவைச் சேர்ந்த 16 செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு தங்களது அமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான தமது சொந்த தீர்வுகளை கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டனர்.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான எதிர்காலத் திட்டமிடலை ஒழுங்கமைப்பதற்கான முக்கிய விடயங்கள்

தலைப்பு, உப தலைப்பு மற்றும் நோக்கங்கள்

  1. ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள், ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இனங்கண்டு அவற்றை வெற்றி கொள்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்குதல்.
  2. நலன்புரித் திட்டங்கள், சம்பள முன்மொழிவுகள் மற்றும் தொழில்முறை உரிமைகள்
  3. எமது முன்மொழிவுகளை எவ்வாறு செயற்படுத்துவது
  4. வருடாந்தம் ரூ. 1200 உறுப்பினர் சந்தாவை எவ்வாறு தொடர்ச்சியாக செலுத்துவது?
  5. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் (தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கம், அரச ஊடக நிறுவனங்கள், தேசிய ஊடகவியலாளர் சங்கம்) மற்றும் இளம் ஊடகவியலாளர்களை அணிதிரட்டுவதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகள்.
  6. அரச ஊடக நிறுவனங்களில் தொழில்சார் சிக்கல்கள், கூட்டாக பேரம் பேசும் ஒப்பந்தம், பேச்சுவார்த்தை செய்யக்கூடிய திட்டங்கள், பிரதேச ஊடகவியலாளர்களின் சம்பளம், கொடுப்பனவு முறைகளை பெறுவதற்கான உத்திகள்
  7. FMETU உடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களை வலுப்படுத்துதல். ஒவ்வொரு ஊடகவியலாளர்கள்/ நிறுவனங்களை எவ்வாறு அணிதிரட்டுவது என்பதைக் கண்டறிதல்.
  8. FMETU.org இணையதளத்தைப் புதுப்பிக்க/ மேம்படுத்துதல். செய்திமடலை பிரசுரித்தல் தொடர்பில் திட்டமிடல். நியுஸ் புல்லட்டின் வடிவமைத்தல் மற்றும் திட்டமிடல்.
  9. ஊடகவியலாளர்களின் தொழில்முறை பயிற்சி (டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்ப ஊடகவியலார்களை மாற்றுதல்) – தொழில்முறை நிலை, தேவையான அறிவு, திட்டமிடல்
  10. சங்கத்திற்கான வருடாந்த வரவு செலவுத் திட்டத்தை தயாரித்தல்