About us

Welcome to the
Federation of Media Employees
Trade Unions (FMETU)

ஊடகவியலாளர்களின் தாய் வீடு

இலங்கையில் வலுவான சுயாதீன ஊடகத் துறையை உருவாக்குவதற்காக ஊடகத் துறையில் பாதுகாப்பான தொழில் ரீதியான மதிப்புகளுடனான வலுவான அமைப்பு எனும் திறன் கொண்ட சுயாதீன ஊடக ஊழியர்களைக் கொண்ட குழுவை உருவாக்குதல்

ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (FMETU), 2002 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதுடன், இலங்கையின் ஊடகத் துறையில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களின் துணை நிறுவனமாக வர்த்தக சங்கங்களின் பதிவாளரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு முன்னிற்கும் முன்னணி தொழிற்சங்கமாகும். ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் தொழிலாளர்களின் பொதுவான அல்லது உறுப்பினர்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்ப்பதற்கும், அவர்களின் தொழிலைப் பாதுகாப்பதற்கும் எப்போதும் முன்னிற்கும்.

 

2000ஆம் ஆண்டில், ஊடகவியலாளர்களின் சர்வதேச மாநாட்டில் (IFJ), முழு உறுப்புரிமையை பெற்றுக் கொண்ட இலங்கையின் முதலாவது ஊடக அமைப்பு FMETU ஆகும்.

 

பின்வரும் நோக்கங்களுக்காக அது நிறுவப்பட்டது

  • இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் அனைத்து ஊழியர்கள் மற்றும் பிரதேச ஊடகவியலாளர்கள் அனைவரையும் ஒரே சம்மேளனத்திற்குள் கொண்டு வருதல்.
  • உறுப்பினர்களின் உரிமைகள், அவர்களுக்கான நன்மைகள் மற்றும் தொழிற்சங்கங்களின் சார்பாக முன்னிற்றல், பாதுகாத்தல் மற்றும் உரிமைகளை விஸ்தரித்தல்.
  • உறுப்பினர்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துதல்.
  • உறுப்பினர்களுக்கு பின்வரும் நன்மைகளை வழங்குதல்
    • தொழிற்சங்க நடவடிக்கை அல்லது நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பெறுவதற்கான தொழிற்சங்க போராட்டங்கள் காரணமாக உறுப்பினர்களை மிரட்டல் விடுத்தல் மற்றும் துன்புறுத்துவதற்கு எதிரான உதவிகளை வழங்குதல்
    • தேவையேற்படும்போது அவர்களது வேலைவாய்ப்பு பிரச்சினைகள் தொடர்பான சட்ட உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்குதல்.
  • சம்மேளனம் மற்றும் ஏனைய அதனுடன் தொடர்புடைய குழுக்களுக்கு இடையேயான உரிய முறையிலான தொடர்புகளை வலுப்படுத்துதல்.
  • தொழில் ரீதியான சச்சரவுகளின் போது உறுப்பினர்கள் சார்பில் பிரதிநிதித்துவம் வழங்குதல்.
  • ஊடக சமூகத்தை பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளில் தலையீடுகளை மேற்கொள்ளுதல்.

 

INTERNATIONAL AND LOCAL

Leading Media Organizations

உங்களிடம் கேள்விகள் உள்ளதா? அழைக்கவும் அல்லது சந்திக்கவும்

+[94] 773 641 1111

# 30,
அமரசேகர மாவத்தை, கொழும்பு 5,
இலங்கை.

info@fmetu.org 

செய்திமடல்

சமீபத்திய செய்தி மற்றும் புதுப்பிப்பைப் பெறுங்கள்

எம்மை தொடர்பு கொள்ளுங்கள்

© 2021 – FMETU. All rights reserved.

Carefully crafted by Cyber Ceylon