இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 13வது ஆண்டு நினைவு தினம் இன்று சனிக்கிழமை (08) மு.ப. 10.00 மணியளவில் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து மட்டு.ஊடக அமையத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணாக்கியன்,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ். சிவயோகநாதன், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள்,அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள்,பொது அமைப்புகளின் பிரமுகர்கள்,மதத்தலைவர்களுக்கு அழைக்கு விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் வாழ்கை வரலாறு அடங்கிய கோர்ப்புக்களை இந்தியாவைச் சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும்,இயக்குனருமான புகழேந்தி தங்கராசா படமாக உருவாக்கி இன்றையதினம் இந்தியாவில் வெளியீட்டு வைக்கப்பட்டவுள்ளது.
க. விஜயரெத்தினம்