கிருஷ்ணி கந்தசாமி இஃபாம்:
பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து ரெயின்போ இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்யூனிகேஷன் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட ஊடக நெறிமுறை (மீடியாதன்) தொடர்பிலான பயிற்சி நெறி முடிவில் சமூக உள்ளடக்கம் மற்றும் ஊடக நெறிமுறைகள் குறித்து ஊடகவியலாளர்கள் தங்கள் உறுதிமொழியை முன்வைத்தனர்.
‘இலங்கையில் நல்லிணக்க செயல்முறையை வலுப்படுத்துதல்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பயிற்சிநெறி அமைதிருந்தது. இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் பெடரல் வெளியுறவு அலுவலகத்தால் நிதியளிக்கப்பட்டது.
சமூக உள்ளடக்கம் மற்றும் ஊடக நெறிமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு தீவிரமான 21 மணிநேர ஆன்லைன் பயிற்சி மீடியாதன் ஆகும். இலங்கையிலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து சமூகங்கள் மற்றும் மொழிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்திரிகைகள்;, வானொலி, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள்; பணியாற்றும் 130 முழுநேர ஊடகவியலாளர்கள் , சுதந்திர ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக மாணவர்கள் இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தனர்.
சமூக ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட, அமைதியான மற்றும் வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளை வளர்ப்பதில் ஊடகங்களின் பங்கு குறித்து மீடியாதன் கவனம் செலுத்தியது.
ரெயின்போ நிறுவனத்தின் பிரதம கற்கை ஆலோசகரும் சிரேஷ்ட தொடர்பாடல் கற்கையாளருமான கலாநிதி மஹிம் மெண்டிஸ், முன்னாள் ரொயிட்டஸ் செய்தி சேவையின் வெளிநாட்டு நிருபரும் மற்றும் ஊடக பயிற்றுவிப்பாளர் சிஹார் அனீஸ் மற்றும் திறந்த பல்கலைக்கழகத்தின் தொடர்பாடல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி துஷாரி கமகே ஆகிய மூன்று ஊடகப் பயிற்றுவிப்பாளர்களால் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
மீடியாதன் பாடத்திட்டமானது ஊடக நிபுணர் திருமதி டான்யா வர்ணகுலசூரிய தலைமையிலான பிரிட்டிஷ் கவுன்சில் நிபுணர்கள் குழுவால் வடிவமைக்கப்பட்டது. ஊடக வல்லுநர்கள் மற்றும் ஊடகப் பயிற்றுவிப்பாளர்களைக் கொண்ட ரெயின்போ இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன் குழுவுடன் திருமதி வர்ணகுலசூரிய நடத்திய பட்டறை மூலம் பாடத்திட்டம் உள்ளூர்மயமாக்கப்பட்டது.
பங்கேற்பாளர்கள் மொழியின் அடிப்படையில் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். 7 நாட்கள் கொண்ட அமர்வில் தீவிர கற்றல் மற்றும் நடைமுறை பயிற்சிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இறுதி அமர்வின் போது, பங்கேற்பாளர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமான சுவரொட்டிகள் மற்றும் வாசகங்களை வடிவமைத்து, ஊடக நெறிமுறைகள் மற்றும் சமூக உள்ளடக்கத்தில் தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர்.
கடந்த வாரம் டிசம்பர் 16 ஆம் திகதியன்று கொழும்பில் உள்ள ரெயின்போ இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன் வளாகத்தில் பயிற்சியினை முடித்த 20 ஊடகவியலாளர்கள் நேரடியாக அங்கு ஒரு அடையாளச் செயலாக பங்குகேற்பதற்கு ஓழுங்கு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மற்றைய அனைத்து பங்கேற்பாளர்களும் நேரடியாக சூம் நேரலை ஆன்லைன் மூலம் பங்கேற்றனர்.
விருது வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக பிரிட்டிஷ் கவுன்சிலின் கல்வி மற்றும் ஆங்கிலப் பணிப்பாளர் திருமதி லோயிஸ் கௌச்சர் கலந்து கொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், ‘எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்’ -‘னுழு Nழு ர்யுசுஆ’ என்ற கொள்கையின் அடிப்படையில் துல்லியமான தகவல்களை வழங்குவதில் ஊடகங்களின் பங்கு மற்றும் பொறுப்பு குறித்து வலியுறுத்தினார். ரெயின்போ இன்ஸ்டிட்யூட் ஊடக பயிற்சியில் பங்கேற்ற ஊடகவியாளர்களால் வடிவமைத்த சுவரொட்டிகள் மற்றும் வாசகங்களை ஏனைய் நலனுக்காகப் பயன்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.
ஊடகவியலாளர்கள் பயிற்சி திட்டம் குறித்து தமது அனுபவங்களை முன்வைத்து பாராட்டுவதில் ஒருமனதாக இருந்தனர் மற்றும் சமூக உள்ளடக்கம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பாக தாங்கள் கற்றுக்கொண்டதை ஊடகவியலாளர்கள் தம்மை ஒரு பொது சேவையாளகளாக இனங்காட்டி தங்களது அன்றாட பணி;களில் பயன்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்கள்.
கலாநிதி மஹிம் மெண்டிஸ், இலங்கையின் ஊடகத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான பெறுமதியான வாய்ப்பிற்காக பிரித்தானிய கவுன்சிலுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். ரெயின்போ நிறுவனம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஊடக மேம்பாடு மற்றும் ஊடகவியலாளர்களை தொழில்முறை திறன் மேம்பாட்டில் மேம்படுத்துவதில் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அவர் விளக்கினார்.