சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் (IFJ)வழிகாட்டலின் கீழ், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (FMETU) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த ஆய்வொன்றின் அறிக்கையை கடந்த செப்டெம்பர் 05 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊடகத்துறையில் ஆர்வமுள்ள புத்திஜீவிகளின் கருத்துகள் இந்த ஆய்வில் பெறப்பட்டிருந்தன.

இலங்கையில் ஊடகத்துறையானது மக்கள் சேவை வெகுசன ஊடக சேவையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும், அது தொடர்பான யோசனைகள் ஊடக நிறுவனத் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் உரிய அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்கப்படும் எனவும் FMETU பொதுச் செயலாளர் தர்மசிறி லங்காபேலி இங்கு தெரிவித்தார்.

இந்த அறிக்கையை சமூகமயப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய ஊடக அபிவிருத்திக் கொள்கையை நிறுவுதல் மற்றும் ஊடகவியலாளர்களின் தொழில்சார் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனத் தலைவர்கள், சிவில் சமூகம் ஆகியோரின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையானது, ஒரு தொழில்துறையாக ஊடகத்துறை எதிர்கொள்ளும் சவால்கள் ஊடகத்துறை மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகள் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த முன்மொழிவுகளை வென்றெடுப்பதற்காக, FMETU மற்றும் IFJ ஆகியன கூட்டு நடவடிக்கைகளைத் முன்னெடுக்க எதிர்பாப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

தொடர்பாடல் துறையில் முன்னிலையில் உள்ள திருமதி மெனிக் மெண்டிஸ் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன ஆகியோரிடமும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட FMETU தேசிய அமைப்பாளர் தரிந்து உடுவரகெதர தெரிவிக்கையில், ‘இந்த ஆய்வுக்காக இலங்கை முழுவதும் 250 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொண்டோம். தடைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து இந்த ஆய்வை நடத்தினோம். ஊடக சுதந்திரம் மற்றும் அதை தடுக்கும் சட்டதிட்டங்கள் தொடர்பிலும் ஊடகங்களுக்கு எதிரான சட்டங்கள் தொடர்பில் நாம் இந்நத ஆய்வை முன்னெடுத்தோம்.

ஊடகத்துறையை பொதுமக்கள் சேவை தொழில்துறையாக மாற்றுவதற்குத் தேவையான சூழலை உருவாக்க நாம் எதிர்பார்க்கிறோம். இந்த நாட்டில் ஊடகவியலில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவன உரிமையாளர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதை நாம் அறிவோம். இந்த அறிக்கையில், தொழில்முறை பாதுகாப்பு மற்றும் ஊடக அறிக்கையிடலில் எழும் சவால்கள், ஏற்படும் தடைகள் குறித்து நாம் கலந்துரையாடியுள்ளோம். அத்துடன் அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளையும் முன்மொழிந்துள்ளோம்.

FMETU சம்மேளனத்தின் தலைவர் திருமதி கிருஸ்ணி இர்பாம் இங்கு தமிழில் விளக்கமளித்ததோடு, ஊடகவியலாளர் சந்திப்பில் செயற்குழு உறுப்பினர் ஷரீபா தாஹிர் ஆங்கிலத்தில் இது தொடர்பான விளக்கத்தை வழங்கினார். இதில் சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர் காலி அநுராத பிரியதர்ஷனவும் கலந்துகொண்டார்.