tinyurl.com/FMETU-PROFILE ஊடாக இணையுங்கள்

IFJ-UTU 2022 நிகழ்ச்சித் திட்டம், FMETU உறுப்பினர் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களின் தொழில்முறை உரிமைகளை வலுப்படுத்துதல், அவர்களின் தகவல்களின் அடிப்படையில் ஒரு தரவுத்தளத்தை செயல்படுத்துதல் மற்றும் தொழில்முறை பிரச்சினைகள் குறித்த 15 குறும் வீடியோக்களை பதிவேற்றுதல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய செயற்பாடுகளாகும்.

IFJ-UTU ஆதரவுத் திட்டமானது, பிராந்திய ஊடக நிறுவனங்களை வலுப்படுத்த IFJ ஆசிய பசிபிக் அலுவலகத்தால் வருடாந்தம் நடத்தப்படுகிறது.

ஊடகவியலாளர்களின் அடிப்படை தொழில்சார் உரிமைகளில் செல்வாக்கு செலுத்துவதற்கும், அவர்களுக்காக குரல் கொடுப்பபதற்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு தெளிவுபடுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.

சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடன் இளம் ஊடகவியலாளர்களை ஒருங்கிணைப்பது குறித்த உறுப்பினர்களின் யோசனைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் இளம் ஊடகவியலாளர்களை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். ஒரு தொழிற்சங்கம் எனும் வகையில், ஒரு செயற்பாட்டு ரீதியான பங்கு வகித்தல் மற்றும் புதிய உலகின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் திறம்பட செயல்பட அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதோடு, உறுப்பினர்களை அறிவால் முழுமைப்படுத்துவதை இந்நிகழ்ச்சியின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓகஸ்ட் 27, 2022 ஆம் திகதி, நாடு முழுவதிலுமிருந்து 300 ஊடகவியலாளர்களின் பங்கேற்பினை எதிர்பார்த்தவாறு சிங்கள மற்றும் தமிழ் மொழி ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் இணையவழி கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டு அது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.

மேற்படி திட்டத்தில் பங்குபற்றிய, 20 இளம் ஊடகவியலாளர்களும் டிஜிட்டல் மீடியா பயிற்சி திட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த இளம் ஊடகவியலாளர்களுக்கு செப்டெம்பர் 03 ஆம் திகதி, விசேட நிபுணத்துவ பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு நாள் பயிற்சிப்பட்டறையும் இடம்பெறவுள்ளது.

பயிற்சிக்குப் பின்னர், fmetu.org இணையத்தளம் மூலம் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்த 15 ஆய்வு வீடியோக்களை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

நிகழ்ச்சியின் முடிவில் ஊடகவியலாளர்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்த அறிக்கை fmetu.org இணையத்தில் வெளியிடப்படும். ஊடக ஊழியர் சங்க சம்மேளனம் இந்த அறிக்கையை அரசாங்க அதிகாரிகளுக்கு அனுப்பி, பொறுப்பானவர்களுடன் கலந்துரையாடலுக்கான அணுகுமுறையை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.

இலங்கை ஊடகத்துறையில் முறையான தொழில் கண்ணியம் கொண்ட தொழில்முறை ஊடகவியலாளர்கள் குழுவை உருவாக்குவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என ஊடக ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தர்மசிறி லங்காபேலி தோழர் fmetu.org இணையத்திற்கு தெரிவித்தார்.

இந்த பிரச்சார திட்டத்தில் இணைய விரும்பும் தொழில்முறை ஊடகவியலாளர்கள் எதிர்வரும் செப்டம்பர் 05 ஆம் திகதிக்கு முன் https://tinyurl.com/FMETU-PROFILE என்ற Google விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்கள் ஆதரவைத் தெரிவிக்குமாறு அமைப்பாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.