நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 21 ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய இளம் ஊடகவியலாளர்கள் குழுவொன்று, 2022 செப்டெம்பர் 03ஆம் திகதி டிஜிட்டல் ஊடகம் தொடர்பான மேம்பட்ட பயிற்சிப்பட்டறையொன்றி இணைந்தது.

ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பினால் வருடாந்தம் நடத்தப்படும் IFJ – UTU திட்டத்தின் மூலம் ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் (FMETU) இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் பயனுள்ள ஊடகவியலில் ஈடுபடுவதற்கும், தொழில்சார் ஊடகவியலாளர்களின் அடிப்படை தொழில் உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களை வலுவூட்டுவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இம்முழுத் திட்டமும் கையடகத்தொலைபேசி ஊடகவியல் (MoJo- Mobile Journalism) தொடர்பான செயற்பாட்டு பயிற்சியைக் கொண்ட ஒரு பயிற்சித் திட்டமாகும். இந்த நிகழ்ச்சியின் பிரதான பயிற்றுவிப்பாளராக டிஜிட்டல் ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற்ற கலாநிதி சமிர திலகவர்தன கலந்து கொண்டார். அவர் திறந்த பல்கலைக்கழகத்தில் இத்துறை தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளராவார். நிகழ்ச்சியில் இணைந்த இளம் பத்திரிக்கையாளர்கள் இந்த விடயத்தைப் பற்றிய அதிகளவான விடயங்களை கற்றுக்கொண்டதோடு, குழுவாகப் பிரிக்கப்பட்டு குறும் வீடியோக்களை தயாரிப்பதில் ஈடுபட்டு, ஒவ்வொரு குழுவும் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி வித்தியாசமான வகையில் வீடியோக்களை தயாரித்து காண்பித்தனர்.

பயிற்சி பெற்ற ஊடகவியலாளர்கள் தங்களின் தொழில்முறை நெறிமுறைகள் மற்றும் ஊடகத் துறை தொடர்பான சிக்கல்களை முன்னிலைப்படுத்தும் வீடியோக்களை சமர்ப்பிப்பார்கள் என்பதுடன் குறித்த வீடியோக்கள் fmetu.org இணையத்தளத்தில் பதிவேற்றப்படவுள்ளன.

இதற்கான வழிகாட்டல் மற்றும் வள பங்களிப்புக்காக சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்திற்கும் (IFJ), இதற்கான பயிற்சியை வழங்கிய கலாநிதி சமிர திலகவர்தன, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மிகவும் வெற்றிகரமாக முடிக்க ரெயின்போ கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் நன்றி தெரிவித்துள்ளது.