உலகளாவிய தொழிற்சங்க திட்டத்தின் கீழ் சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்கங் சம்மேளனமானது இலங்கையில் ஊடகவியலாளர்களின் தொழில்நிலை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஒரு தனித்துவமான கணக்கெடுபொன்றை நடத்தியது.


யாழ்.மாவட்ட ஊடகவியலாளர் கந்தசாமி செல்வகுமார் அவர்கள், ஊடகவியலாளர்களின் கணக்கெடுப்பு அறிக்கை மற்றும் தொழில்சார் பிரச்சினைகள் அடங்கிய 16 காணொளிகளை தொழில் அமைச்சரும் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருமான மனுஷ நாணயக்காரவிடம் கையளித்தார்.

தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.விமலவீர, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரகிர்த்தி, ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தர்மசிறிலங்காபேலி, தலைவி கிருஷ்ணி கந்தசாமி இஃபாம், பொருளாளர் றிஸ்வான் சேகு முகைதீன், தேசிய ஒருங்கமைப்பாளர்டக்ளஸ் நாணயக்கார உள்ளிட்ட செயற்குழுவினர், மற்றும் செயற்குழுவினர், கூட்டமைப்பின் மாவட்ட தலைவர்கள் உட்பட ஏராளமான அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார,

ஒப்பந்த மற்றும் பகுதிநேர ஊழியர்களை என வேலை செய்பவர்கள் அனைவரின் தொழில் பாதுகாப்பை பாதுகாப்பதற்கான கொள்கை இருக்க வேண்டும். தொழில் அமைச்சு என்ற ரீதியில் தாம் இவ்வாறு பணியாற்றக் கடமைப்பட்டிருப்பதாகவும், பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றும் போது ஒப்பந்த மற்றும் பகுதிநேர ஊழியர்களை உள்ளடக்கும் வகையில் தொழிலாளர் சட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை முன்வைத்ததாகவும் இது குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும், ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தொழிலாளர் சட்டத்தை மாதங்கள் மற்றும் ஆண்டுகள் என தாமதப்படுத்த எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை பாதுகாக்க தேவையான விதிகள் மற்றும் விதிமுறைகளை விரைவில் உருவாக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் தொழிலாளர் அமைச்சர் முழு சட்ட கட்டமைப்பையும் நிறைவு செய்யும் என்று மேலும் அமைச்சர் கூறினார்.